search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அம்மா குடிநீர்"

    கும்மிடிப்பூண்டி உற்பத்தி நிலையம் முடங்கியதால் அம்மா குடிநீர் விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது. தற்போது குளிர்பதன கிடங்குகளாக புதுப்பிக்கப்பட்டுள்ளன.
    சென்னை:

    மறைந்த முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதாவின் ஆட்சிகாலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட மக்கள் நலத்திட்டங்களில் அம்மா உணவகம் மற்றும் அம்மா குடிநீர் திட்டம் வரவேற்பை பெற்றன.

    பொதுமக்களுக்கு குறைந்த விலையில் பாதுகாப்பான சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கிட வேண்டும் என்ற நோக்கில் அரசு போக்குவரத்து கழகங்களின் சார்பில் 2013 செப்டம்பர் 15-ந்தேதி அம்மா குடிநீர் திட்டம் கொண்டுவரப்பட்டது.

    திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சாலை போக்குவரத்து நிறுவன வளாகத்தில் 2.47 ஏக்கர் பரப்பளவில் சுமார் 10.5 கோடி மதிப்பீட்டில் அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் சார்பாக அம்மா குடிநீர் உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டது.

    நாள் ஒன்றுக்கு 3 லட்சம் லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட கும்மிடிப்பூண்டி உற்பத்தி ஆலையில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் 1 லிட்டர் பிளாஸ்டிக் பாட்டில்களில் நிரப்பப்பட்டு தமிழ்நாடு முழுவதும் உள்ள பஸ் நிலையங்களிலும் நீண்ட தூரம் செல்லும் அரசு பஸ்களிலும் ரூ.10 என நிர்ணயிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வந்தது.

    தனியார் நிறுவனங்கள் ரூ.20 முதல் ரூ.25-க்கு ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டிலை விற்று வந்தன. இதனால் அம்மா குடிநீர் திட்டத்துக்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்தது. இதன் காரணமாக அம்மா குடிநீர் திட்டம் மாநிலம் முழுவதும் 377 இடங்களில் விற்பனை மையங்கள் அமைக்கப்பட்டு விரிவுப்படுத்தப்பட்டது.

    அம்மா குடிநீர்


    சென்னையில் மட்டும் 53 விற்பனை மையங்கள் அமைக்கப்பட்டு போக்குவரத்து ஊழியர்கள் பணியில் அமர்த்தப்பட்டனர்.

    கும்மிடிப்பூண்டி ஆலை தொடங்கப்பட்ட நேரத்தில் அந்த ஆலையின் உற்பத்தி திறன் நாள் ஒன்றுக்கு 2 லட்சம் முதல் 2.5 லட்சம் லிட்டர் வரை இருந்தது. பின்னர் குடிநீரின் அளவு குறைந்து கொண்டே வந்தது.

    சுற்றுப்புறங்களில் நிலத்தடி நீர் குறைந்ததால் உற்பத்தி 90 ஆயிரம் முதல் 1.5 லட்சம் லிட்டர் வரை மட்டுமே இருந்தது. 2019 நீர் வடிகட்டிகளில் சேர் மற்றும் மண் குவிந்ததால் உற்பத்தி குறைந்தது. இதனால் நாள் ஒன்றுக்கு 45 ஆயிரம் லிட்டர் மட்டுமே உற்பத்தி செய்ய முடிந்தது. எனவே விற்பனை குறைந்தது. மேலும் கொரோனா காலத்தில் பேருந்துகள் செயல்பட வில்லை.

    கும்மிடிப்பூண்டி குடிநீர் உற்பத்தி ஆலையை மட்டுமே நம்பி விரிவுப்படுத்தப்பட்ட அம்மா குடிநீர் திட்டமானது உற்பத்தி குறைந்ததன் காரணமாக மெல்ல மெல்ல முடங்கத் தொடங்கியது.

    தற்போது அம்மா குடிநீர் விற்பனை முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. போக்குவரத்துத் துறை மாநிலம் முழுவதும் விற்பனையை நிறுத்தி உள்ளது. விற்பனை நிலையங்கள் நேர அலுவலகங்களாக மாற்றப்பட்டுள்ளது.

    கும்மிடிப்பூண்டி உற்பத்தி நிலையம் முடங்கியதால் அம்மா குடிநீர் விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது. தற்போது குளிர்பதன கிடங்குகளாக புதுப்பிக்கப்பட்டுள்ளன.

    இது தொடர்பாக அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறும்போது, கும்மிடிப்பூண்டி உற்பத்தி நிலையத்தில் உள்ள எந்திரங்கள் சமீபத்தில் செயலிழந்ததால் உற்பத்தி நிறுத்தப்பட்டது. குடிநீர் உற்பத்தி ஆலை மூடப்படவில்லை. ஆனால் செயல்படாமல் உள்ளது. இது தொடர்பான அரசின் அறிவுறுத்தலுக்காக காத்திருக்கிறோம் என்றார்.

    அம்மா உணவகத் திட்டம் தொடர்ந்து செயல்பட்டு ஏழை, எளிய மக்களுக்கு பயன் அளிக்கும் வகையில் இருந்து வருகிறது.


    கோவையில் இருந்து கேரளாவுக்கு 10 லாரிகளில் அம்மா குடிநீரை அமைச்சர்கள் எஸ்.பி.வேலு மணி, எம்.ஆர். விஜயபாஸ்கர் ஆகியோர் கொடியசைத்து அனுப்பி வைத்தனர்.

    கோவை:

    கேரளாவில் கடந்த வாரம் பெய்த வரலாறு காணாத மழை மாநிலத்தையே உலுக்கியது. வெள்ளத்தில் சிக்கி 370-க்கும் மேற்பட் டோர் பலியானார்கள். லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு முகாம்களில் தஞ்சமடைந்தனர்.

    இந்நிலையில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் கடந்த வாரம் ரூ.4 கோடி மதிப்பில் 42 வகையான நிவாரணப் பொருட்கள் 30-க்கும் மேற்பட்ட லாரிகளில் அனுப்பி வைக்கப்பட்டது.

    இதனையடுத்து இன்று தமிழக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் கேரளாவில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு லட்சம் லிட்டர் அம்மா குடிநீர் அனுப்பி வைக்கப்பட்டது. அமைச்சர்கள் எஸ்.பி.வேலு மணி, எம்.ஆர். விஜயபாஸ்கர் ஆகியோர் 10 லாரிகளில் இந்த குடிநீரை கொடி அசைத்து அனுப்பி வைத்தனர்.

    நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க் கள் பி.ஆர்.ஜி.அருண்குமார், அம்மன் அர்ச்சுணன், ஆறுக்குட்டி, எட்டிமடை சண்முகம், ஓ.கே. சின்னராஜ், கலெக்டர் ஹரிஹரன், மாநகராட்சி கமி‌ஷனர் விஜயகார்த்திகேயன், மாசுகட்டுப்பாட்டு வாரிய கோட்ட பொறியாளர்கள் மணிமாறன், மணி வண்ணன், கோவை அரசு போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் முத்து கிருஷ்ணன், பொது மேலாளர்கள் கோவிந்தராஜ், வீரமணி உள்பட பலர் கலந்து கொண்டனர். அப்போது அமைச்சர்கள் முன்பு தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மூலம் பிளாஸ்டிக் ஒழிப்பு உறுதி மொழி ஏற்கப்பட்டது.

    ×